சஷிந்திர ராஜபக்ஷவிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி குற்றப்பத்திரிகை பிரதிவாதிகளுக்கு வாசித்துக் காட்டப்பட்டது.
மே 9 வன்முறையின் போது மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான செவனகல, கிரியிப்பன்கடவ பகுதியில் உள்ள சேதமடைந்த சொத்துகளுக்கு, தனது அதிகாரித்தை பயன்படுத்தி இழப்பீடாக 88 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்றுபிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை 07-07-2026 அன்று பிரதிவாதிகளிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது மன்றில் முன்னிலையான பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்து, ஒவ்வொருவரையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் கீழ் விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன உத்தரவிட்டார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி குற்றப்பத்திரிகை பிரதிவாதிகளுக்கு வாசித்துக் காட்டப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகளைப் பிணையில் விடுவித்த நீதிபதி, அவர்களது விரல் அடையாளங்களைப் பெற்றுக்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார். அத்துடன், இந்த வழக்கின் முன்திரையிடல் மாநாட்டை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்கும் நீதிபதி உத்தரவிட்டார். அரச காணி விவகாரம் தொடர்பான ஊழல் வழக்கில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷவுடன் சேபாலிகா சமன்குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொடகம ஆகியோரே ஏனைய பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான செவனகல, கிரியிப்பன்வெவ பகுதியில் அமைந்துள்ள அரச காணியொன்றில், சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடம் உள்ளிட்ட சொத்துக்கள், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 வன்முறையின் போது சேதமடைந்திருந்தன. குறித்த சொத்துக்களுக்காக இழப்பீடு வழங்குவது நிராகரிக்கப்பட்டிருந்த பின்னணியில், அதற்கு முரணான வகையில் இழப்பீட்டுக்கான காரியாலயத்துடன் இணைக்கப்பட்டிருந்த சில அரசாங்க அதிகாரிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் பிரயோகித்து, 8,850,000 ரூபா பணத்தை இழப்பீடாகப் பெற்றுக்கொண்டதன் மூலம் ஊழல் புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.





