நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் ஏற்பட்ட கலவரம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு
இந்த ஆரம்பக் கட்ட மோதலின் போது இருதரப்பையும் சேர்ந்த கைதிகள் காயமடைந்ததுடன், அவர்களில் இருவர் உயிரிழந்ததோடு மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு நாட்களாக தொடர்ந்த சிறைச்சாலை கைதிகளிடையே ஏற்பட்ட கடும் மோதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மற்றொரு கைதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், மேற்படி சம்பவித்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த மோதலின் போது தாகுதலுக்கு ஆளான 4 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட பலர நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறைச்சாலையில் ஏற்பட்ட கைலவரம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில், பொலிஸார், மத்திய குற்றத் தடுப்பு பிரிவு, குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களமும் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய ஒரு குழுவினருக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மற்றொரு குழுவினருக்கும் இடையில் முதற்கட்டமாக மோதல் ஏற்பட்டிருந்தது. இந்த ஆரம்பக் கட்ட மோதலின் போது இருதரப்பையும் சேர்ந்த கைதிகள் காயமடைந்ததுடன், அவர்களில் இருவர் உயிரிழந்ததோடு மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, காலை கைதிகள் மீண்டும் மொதலில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதும், கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளையும் கடுமையாக தாக்கியிருந்தனர். இந்தத் தாக்குதல்களில் சிறைச்சாலைகள் அவசர நிலமைகளை கையாளும் படையணி குழுவை சேர்ந்த 7 பேரும், கைதிகள் 19 பேரும் உயிரிழந்தனர்.





