நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் -சிறை அதிகாரிகள் 7 பேரின் பூதவுடலுக்கு சிறைச்சாலை தலைமையகத்தில் அஞ்சலி
முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய, பிரிவிடைபெறும் அதிகாரிகளின் பூதவுடலுக்கு அவர்களது குடும்பத்தாரும் சக அதிகாரிகளும் கண்ணீர்மல்கத் அஞ்சலி செலுத்தியிருந்தமை காண்போரைக் கண்கலங்க வைக்கும் காட்சியாக இருதயத்தில் உறைந்தது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகள் மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்கள், பிரேத பரிசோதனையின் பின்னர் 08-07-2026 அன்று பொரல்லையில் உள்ள சிறைச்சாலை தலைமையகத்துக்குக் கொண்டுவரப்பட்டு அரச மரியாதையுடன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய, பிரிவிடைபெறும் அதிகாரிகளின் பூதவுடலுக்கு அவர்களது குடும்பத்தாரும் சக அதிகாரிகளும் கண்ணீர்மல்கத் அஞ்சலி செலுத்தியிருந்தமை காண்போரைக் கண்கலங்க வைக்கும் காட்சியாக இருதயத்தில் உறைந்தது.
நீர்கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட அதிகாரிகளின் உயிரற்ற தேகங்களை வைக்கப்பட்டு தேசிய கொடி போர்த்தப்பட்ட பேழைகளை, வாகனங்களில் இருந்து இறக்கிய சக அதிகாரிகள் துயருக்கு மத்தியிலும், உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதை அளித்து தமது தோள்களில் தாங்கி வந்திருந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்ட சிறை அதிகாரிகளின் பூதவுடல்கள் சிறைச்சாலை தலைமையகத்தின் பரிசோதனை மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சார்ஜன்ட் ஆர்.பி.ஆர். சஞ்சீவ, சார்ஜன்ட் பி.என்.என். தரங்க, சார்ஜன்ட் டி.என்.ஆர். திலகசிறி, சிறைச்சாலை அதிகாரி எஸ்.எச்.ஜி. சந்திரவம்ச, சார்ஜன்ட் டி.டபிள்யூ. புஷ்பகுமார, சார்ஜன்ட் எஸ்.டி.எஸ். அபேவர்தன மற்றும் சார்ஜன்ட் ஏ.டி. தரங்க ஆகிய அதிகாரிகளே மேற்படி மோதலில் உயிர்தியாகம் செய்திருந்தனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் மாத்திரமல்லாது, உயிரிழந்த அதிகாரிகளின் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என அவர்களை இழந்து தவிக்கும் இரத்த உறவுகளும் சிறைச்சாலை தலைமையகத்தை கண்ணீர்த் துளிகளால் நனையச் செய்திருந்தனர்.





