அனைவரும் ஒன்றுபட வேண்டும் - தயாசிறி ஜயசேகர
அத்துடன் உயர் நீதிமன்றம் மேல் நீதிமன்றம் போன்றவற்றில் பல வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் ஜனநாயக விராே செயல்களுக்கு எதிராகவும் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதன் மூலமே நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும் என ஐக்கிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பொய்யையும் திருட்டையும் ஒன்றாக தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் கூட்டு எதிர்க்க்கட்சி 24-05-2026 அன்று கம்பஹ ஜாஎல பிரேதேசத்தில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு உரையா்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபடவேண்டும். அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களுக்கு எதிராக குரல்கொடுக்க முன்வர வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுபட்டு செயற்பட முடியுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாங்கள ஒன்றுபடவேண்டும். அதனை நாங்கள் உறுதிப்படுத்தியும் இருக்கிறோம். கூட்டுறவு சங்க தேர்தல்கள் அனைத்திலும் கூட்டு எதிர்க்கட்சியே வெற்றிபெற்றிருக்கிறது. நாங்கள் ஒன்றுபட்டதாலே இந்த வெற்றியை அடைந்துகொள்ள முடியுமாகியது.
மேலும் நாட்டின் ஊழலை இல்லாதொழிப்பதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் 323 கொள்கலன்களை விடுவித்து பாரிய மோசடியை செய்திருக்கிறது. இந்த கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோன்று நிலக்கரி கொள்வனவு மோசடி, டீசல் திருட்டு என பல மோசடிகளை இவர்கள் மேற்கொண்டுள்ளனர். தற்போது கொழும்பு கபூர் கட்டிடத்தை நகரசபை எந்தவித விலை மனு கோரலும் இல்லாமல் அரசாங்கத்தின் நண்பர் ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும்போது, சிநேகித அரசியல் செய்வதாக அப்போது இருந்த தலைவர்களை குற்றம் சாட்டி வந்தார். அந்த சிநேகித அரசியலையே அநுரகுமார ஜனாதிபதியும் தற்போது மேற்கொண்டுவருகிறார். அதனாலே வாகனங்களுக்கு வரி அதிகரிப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னர், ஜனாதிபதியின் அந்த நெருங்கிய சிநேகிதர்கள் ஆயிரக்கணக்கான வானங்களுக்குக்கு வங்கி கடன் பற்றுப்பத்திரம் திறந்திருக்கிறது. இதனால் பல பிள்ளியன் ரூபா நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நண்பர்கள் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகளில் பணியாற்றுவதற்கு தங்களின் ஆட்களை நியமித்து, அவர்களுக்கான சம்பளத்தை இவர்களே வழங்குகின்றன. இதனால் அந்த அமைச்சுகள் ஊடாக வெளிவரும் விலை மனுக்கள் தொடர்பான ரகசிய தகவல்கள் இவர்களுக்கு கிடைக்கிறது.
அதேபோன்று அரசாங்கம் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மே தின கூட்டத்தில் தெரிவித்த வழக்கு தீர்ப்பு, சரண குணவர்த்தனவின் வழக்கு தீர்ப்பாகும். ஆனால் ஜனாதிபதி அன்று 25ஆம் திகதி என்றே குறிப்பிட்டார். ஆனால் 26ஆம் திகதியே இவரின் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.அதேநேரம் இந்த ஒருவருட காலத்தில் 40க்கும் அதிகமான நீதிபதிகள் இடை நிறுத்தப்பட்டிருக்கின்றனர். அத்துடன் உயர் நீதிமன்றம் மேல் நீதிமன்றம் போன்றவற்றில் பல வெற்றிடங்கள் காணப்படுகின்றன. பல மாதங்கள் கடந்தம் ஜனாதிபதி அந்த நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பாமல் இருக்கிறார்.
ஏனெனில் இந்த நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு, ஜனாதிபதி எதிர்பார்க்கும் வழக்கு தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கே இவ்வாறு வெற்றிடமாகி இருக்கும் இடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்காமல் பாதமதித்து வருகிறார். எனவே அரசாங்கத்தின் இவ்வாறான ஜனநாயக விராேத நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதன் மூலமே அரசாங்கத்தின் அடக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்றார்.





