சுகீஷ்வர பண்டாரவுக்கு பிணை கோரிக்கை நிராகரிப்பு
அரச நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுகீஷ்வர பண்டார 08-07-2026 அன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஜனாதிபதியின் விசேட கருத்திட்டப் பிரிவின் முன்னாள் பணிப்பாளராகவும், முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருமான சுகீஷ்வர பண்டாரவுக்கு பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பிணை வழங்குவதற்குப் போதுமான எந்தவொரு நியாயமான காரணங்களும் முன்வைக்கப்படவில்லை என கோட்டை நீதிவான் பசந்த அமரசேன உத்தரவு பிறப்பித்து பிணை கோரிககையை நிராகரித்து சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அரச நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுகீஷ்வர பண்டார 08-07-2026 அன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியிலுள்ள அதிகாரி ஒருவரால், சம்பந்தப்பட்ட தொகை 25000 ரூபாய்க்கும் அதிகம் என சான்றளிக்கப்பட்டால், அசாாதாரணமான காரணங்கள் முன்வைக்கப்படாத பட்சத்தில், பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு மாத்திரமே உள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தொகை 25000 ரூபாயை விட கணிசமானளவு அதிகம் எனவும், அது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சந்தேகநபருக்கு எதிரான சாட்சியத் தொகுப்பும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதவான், இவ்வாறானதொரு சூழ்நிலையில் அசாாதாரணமான காரணங்கள் முன்வைக்கப்படாததால் சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்க முடியாது என நீதிவான் மன்றுக்கு அறிவித்தார்.
பிணை உத்தரவு அறிவிக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் மேலதிக அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து, இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இரண்டாவது முறையாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவித்தனர்.





