பட்ஜெட் இன்று: ஜனாதிபதி அநுரகுமார உரை
நாளை (8) முதல் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது. நவம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்க 11-06-2025 வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, விசேட உரையாற்றவுள்ளார்.
நீண்டகால அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு, இம்முறை வரவு,செலவுத்திட்டம் முன்வைக்கப்படுவதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, புதிதாக வரி அதிகரிப்புக்கள் எவையும் வரவு,செலவுத்திட்டத்தில் இடம்பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியில் இருந்து நாடு மீண்டு வருகின்ற நிலையில், வாழ்க்கைச்செலவு குறைப்பு உள்ளிட்ட பொருளாதார நிவாரணம், சலுகைகளை சிலவற்றை அரசாங்கம் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது
2026 நிதியாண்டுக்கான வரவு, செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக கடந்த மாதம் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கமைய இரண்டாவது மதிப்பீடான வரவு, செலவுத்திட்ட உரையை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார்.
நாளை (8) முதல் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது. நவம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலைவிவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .
இந்த காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு,செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும்
2026 நிதியாண்டுக்குரிய வரவு ,செலவுத் திட்டம் குறித்து அரச மற்றும் தனியார் துறையினர் உட்பட ஆசிரியர்கள், வைத்தியர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள்,மற்றும் கைத்தொழிற்றுறையினர் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.





