உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் நேற்றைய தினம் குறித்த மனு 10-07-2026 அன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தானை மனு மீதான விசாரணை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் நேற்றைய தினம் குறித்த மனு 10-07-2026 அன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரரான சுரேஷ் சலே சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், சஹ்ரான் ஹாஷிம் இஸ்லாமிய அரசொன்றை உருவாக்குவதற்கான தனது திட்டத்தை 2018 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தியுள்ளார் என்பதற்கான பலத்த சான்றுகள் ஜனக டி சில்வா ஆணைக்குழுவின் முன்னிலையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டே அவர் செயற்பட்டுள்ளார்.
அதனை சலே செய்யவில்லை. கண்டி எசல பெரஹரா மீது தாக்குதல் நடத்தி, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பதற்ற நிலையை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது. இதுகுறித்த விபரங்களை ஜனக டி சில்வா ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது. அரச பாதுகாப்புப் பிரிவினருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் கண்டறிய முடியாத வகையில், தத்துவார்த்த மற்றும் ஆயுதப் பயிற்சிகளை வழங்குவதற்கு சஹ்ரான் நடவடிக்கை எடுத்திருந்தார். சமூக ஊடகங்கள் வாயிலாக அவர் பகிரங்கமாகவே தனது தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பினார். ஷானி அபேசேகர குறிப்பிடுவது போன்று, இவற்றை மனுதாரரான சுரேஷ் சலே செய்யவில்லை என்று வாதிட்டார்.





