Breaking News
மகசீன் சிறைச்சாலையில் மோதல் - வைத்தியசாலையில் இருவர்
சம்பவத்தில் காயமடைந்த இரு கைதிகள் உடனடியாக சிறைச்சாலை காவலாளர்களினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் இரு கைதிகள் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 5 கைதிகளுக்கிடையில் 10-07-2026 அன்று மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு கைதிகள் உடனடியாக சிறைச்சாலை காவலாளர்களினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மோதல் சம்பவத்துக்கான உறுதிப்படுத்தப்பட்ட காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் வெலிக்கடை பொலிஸார் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் இவ்விடயம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.





