இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 2026 வரவு, செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் குழு நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடியது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்ட மதிப்பீட்டுக்கு அரச நிதி பற்றிய தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் குழு நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடியது.
இதன்போது கருத்து தெரிவித்த குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள நிதி சுயாதீனத்தை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கும்,தேசிய கணக்காய்வு திணைக்களத்துக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரின் கொடுப்பனவுகள் திருத்தம் செய்யப்படுவதை போன்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் தேசிய கணக்காய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் கொடுப்பனவும் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.





