எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் வெறும் கூச்சல் மாத்திரமே: சபாநாயகர்
எதிர்க்கட்சியினர் என்மீது பதவி நிலை அடிப்படையிலும், தனிப்பட்ட முறையிலும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்த போவதில்லை. அவை வெறும் கூச்சல்மாத்திரமே.
எதிர்க்கட்சியினர் என்மீது பதவி நிலை அடிப்படையிலும், தனிப்பட்ட முறையிலும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்த போவதில்லை. அவை வெறும் கூச்சல்மாத்திரமே.எமக்கும் குடும்பம், பிள்ளைகள் உள்ளார்கள். அவர்கள் எனக்கு பலமாகவுள்ளார்கள் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த கால பாராளுமன்றங்கள் எவ்வாறான நிலையில் இருந்தது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். சிறந்த பாராளுமன்றத்தை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்த்தே மக்கள் 2024 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
பாராளுமன்ற நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்தும் போது இதுவரை காலமும் பழைய பழக்கங்களில் இருந்தவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. காலையில் சபை அமர்வை ஆரம்பிக்கும் போது ஏதாவது குறிப்பிட்டு சபையில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.
எதிர்க்கட்சியினர் என்மீது பதவி நிலை அடிப்படையிலும், தனிப்பட்ட முறையிலும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்த போவதில்லை. அவை வெறும் கூச்சல்மாத்திரமே. எமக்கும் குடும்பம், பிள்ளைகள் உள்ளார்கள். அவர்கள் எனக்கு பலமாகவுள்ளார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். செயற்படும் விதம், குறிப்பிடும் விடயங்கள் அனைத்துக்கும் மக்கள் மன்றத்தில் பதிலளிக்க வேண்டும். தற்போதைய செயற்பாடுகள் அனைத்துக்கும் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என்றார்.





