குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அமைச்சு பதவியில் இருந்து விலகுவேன் - அமைச்சர் குமார ஜயகொடி
ராஜபக்ஷ முகவர்களுடனான கொடுக்கல் வாங்கல்களை இடை நிறுத்தியதால் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
2015 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஊழலுக்கு எதிராக நான் செயற்பட்டுள்ளேன். உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அது குறித்து பேசப் போவதில்லை. எம்மை ஊழல்வாதிகள் என்று விமர்சிக்கும் தகுதி எவருக்கும் கிடையாது. இந்த வழக்கு முடிவடைந்தவுடன் பெயர் விபரங்களுடன் விடயங்களை நான் வெளிப்படுத்துகிறேன். ஊழல்மிக்க ராஜபக்ஷர்களும் இதில் முன்னிலையில் உள்ளார்கள். என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அமைச்சு பதவியில் இருந்து அனைத்தையும் தருகிறேன் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 10-04-2026 அன்றுநடைபெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஊழலுக்கு எதிரான கொள்கையை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறோம். அரசாங்கத்தின் சகல உறுப்பினர்களும் ஊழலுக்கு எதிராகவே செயற்படுகிறார்கள். ஊழலுக்கு எதிராக செயற்படும் எமது கொள்கையை சவாலுக்குட்படுத்தும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு கிடையாது. ஏனெனில் கடந்த காலங்களில் அரச நிதியை கொள்ளையடித்தவர்கள் தான் இன்று ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள்.
2015 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஊழலுக்கு எதிராக நான் செயற்பட்டுள்ளேன். உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அது குறித்து பேசப் போவதில்லை. எம்மை ஊழல்வாதிகள் என்று விமர்சிக்கும் தகுதி எவருக்கும் கிடையாது. இந்த வழக்கு முடிவடைந்தவுடன் பெயர் விபரங்களுடன் விடயங்களை நான் வெளிப்படுத்துகிறேன். ஊழல்மிக்க ராஜபக்ஷர்களும் இதில் முன்னிலையில் உள்ளார்கள்.என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அமைச்சு பதவியில் இருந்து அனைத்தையும் தருகிறேன்.
ஊழலுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதால் எம்மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. மக்களின் ஒரு சதத்தை கூட நான் மோசடி செய்யவில்லை. அவ்வாறு மோசடி செய்திருந்தார் அவற்றை ஆதாரத்துடன் நிரூபியுங்கள்.
நிலக்கரி கொள்வனவு பற்றி பேசப்படுகிறது. இதுவரை காலமும் இடம்பெற்ற தவறான முறைமை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி விநியோகத்தர்களுடன் நான் தனிப்பட்ட முறையில் நான் தொடர்புக் கொள்ளவில்லை. ராஜபக்ஷ முகவர்களுடனான கொடுக்கல் வாங்கல்களை இடை நிறுத்தியதால் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
பொதுஜன பெரமுனவின் தாளத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆடுகிறார்கள். யோசித ராஜபக்ஷவின் நண்பரின் நிறுவனத்திடமிருந்தே கடந்த காலங்களில் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டது. இந்த முறைகேடான கொள்முதலை மாற்றியமைத்ததால் குற்றஞ்சாட்டுகிறார்கள். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை எவராலும் பலவீனப்படுத்த முடியாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.





