நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் -துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு கொலை மிரட்டல்;பிரதான சூத்திரதாரி 'சுரேஷ்' மீது தாக்குதல்
குறித்த சிறைசாலை அதிகாரியை கொலைசெய்வதாக கைதிகளால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுாக தெரிய வந்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை அன்று சிறைச்சாலை அதிகாரிகளை இலக்கு வைத்து கைதிகள் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தன்று, சிறைசாலையின் பிரதான நுழைவாயிலில் இருந்த பலகை கதவுக்கு சிறைகைதிகள் சேதம் விளைவித்த போது கைதிகள் வெளியேறுவதை தடுப்பதுக்காக, துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு சிறை கைதிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் வைத்திருந்தமையை காட்டிகொத்தை சம்பவத்தை முன்னிருத்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதிகள் இரு தரப்பினருக்கிடையில் மோதல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சம்பவம் இடம்பெற்று முறுநாள் கைதிகள் அதிகாரிகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தன்று, கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலை நுழைவாயிலில் இருந்த இரும்பு கதவை உடைத்து, பலகை கதவுக்கு சேதம் விளைவித்த போது, அங்கு பணியிலிருந்த அதிகாரி, கைதிகள் வெளிவருவதை தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த சிறைசாலை அதிகாரியை கொலைசெய்வதாக கைதிகளால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுாக தெரிய வந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள், "வெளியில் வைத்து உன்னைக் கொலை செய்வோம்" என அந்த அதிகாரிக்கு கடுமையான கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.





