வடக்கு, கிழக்கு பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியம் - சாணக்கியன் தனிநபர் பிரேரணை
அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தைத் தாபித்தல் என்ற தலைப்பில் இந்த தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தியில் நிலவும் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தைத் தாபிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் தனிநபர் பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தைத் தாபித்தல் என்ற தலைப்பில் இந்த தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வட மாகாணம்,கிழக்கு மாகாணம், மொனராகலை மாவட்டம் மற்றும் நுவரெலியா மாவட்டம் போன்ற பின்தங்கிய பிராந்தியங்கள் நீடித்து நிலவிய சிவில் முரண்பாடுகளின் தாக்கங்களாலும் வரலாற்று ரீதியான புறக்கணிப்புக்களாலும் தொடர்ந்து பல தசாப்தங்களாக கடுமையான பொருளாதார இழப்புக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் இப்பின்தங்கிய பிராந்தியங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது பாரபட்சமான சுமைகள் திணிக்கப்பட்டுள்ளதால் இந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் உக்கிரமடைந்துள்ளதாலும், பொருளாதார ரீதியில் பின்னடைந்த இந்தப் பிரதேசங்களில் ஒப்புரவுமிக்க வளர்ச்சியையும், நிலைபெறுதகு அபிவிருத்தியையும் பால்நிலை வலுவூட்டலையும் மேம்படுத்தும் குறிக்கோளுடன் இக்காரியங்களுக்குரிய விடயங்களை நிவர்த்தி செய்வதற்கென தனியானதொரு தேசிய முன்னெடுப்பினைத் தாபிப்பது அவசியமாக இருக்கிறது.





