அவசரகால சட்டத்தின் ஒழுங்குவிதிகள் எந்தவகையிலும் பொருத்தமில்லை: பைஸர் முஸ்தபா
அனர்த்த நிலைமைக்கு முகம்கொடுக்க அவசரகால சட்டத்தின் ஒழுங்குவிதிகள் எந்தவகையிலும் பொருத்தமில்லை. கொண்டுவந்திருக்கும் ஒழுங்குவிதிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், மக்கள் போராட்டத்தை அடக்குவதற்காக கொண்டுவந்த ஒழுங்குவிதிகளுக்கு சமமானதாகும். அதனால் அனர்த்த முகாமைத்துவ நிலைமை ஒன்றுக்கு முகம்கொடுக்க முடியுமான ஒகுங்குவிதிகளை கொண்டுவந்து இந்த சட்டத்தை அனுமதித்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டு மென எதிர்க்கட்சி உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 06-01-2026 அன்று இடம்பெற்ற பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அனர்த்த நிலைமைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அவசரகால சட்டம் ஒன்றை கொண்டுவந்து பொறிமுறை ஒன்றை தயாரிப்பதற்கே நாட்டில் இடம்பெற்ற அனர்த்தத்துக்கு பின்னர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தீர்மானித்தோம். ஆனால் இன்று சபைக்கு சமர்ப்பித்துக்கும் அவசரகால சட்டத்தின் ஒழுங்குவிதிகளை பார்க்கும்போது, அது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒழுங்குவிதிகள், மக்கள் போராட்டத்தை அடக்குவதற்காக கொண்டுவந்த ஒழுங்குவிதிகளுக்கு சமமானதாகும். தற்போது கொண்டுவந்திருக்கும் ஒழுங்குவிதிகளை பார்க்கும்போது, அது அனர்த்தம் தொடர்பில் அவசரகால நிலைமை ஒன்றை பிரகடனப்படுத்துவதற்கு தேவையான பொறிமுறை ஒன்றை தயாரிப்பதற்காக கொண்டுவந்த ஒழுங்குவிதிகளாக இல்லை என்பதை பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதனால் உண்மையில் அனர்த்த நிலைமை ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டும் தேவை இருக்கும் என்றால், இந்த அவசரகால சட்டத்தை நீடிக்காமல், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அனர்த்த நிலைமைக்கு முகம்கொடுக்க முடியுமான அவசரகால சட்டம் ஒன்றை கொண்டுவருவோம். அனர்த்த நிலைமைக்கு முகம்கொடுக்க கருத்துரிமை சுதந்திரம் எதற்கு என கேட்கிறோம். மக்கள் போராட்டத்தின் போது, அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்போது அதுதொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தீர்ப்பில், இந்த நிலைமையில் இந்த சட்டம் சட்டவிராேம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் அனர்த்த நிலைக்கு முகம்கொடுக்க, இந்த அவசரகால சட்ட ஒழுங்குவிதிகளை அனுமதிப்பதில் சட்டப்பிரச்சினை இருக்கிறது என்றே நினைக்கிறேன். அதனால் உயர்நீதிமன்ற தீர்ப்பை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் எனவே அரசாங்கம் தற்போது கொண்டுவந்திருக்கும் பொது மக்கள் பாதுகாப்பு சட்ட ஒழுங்குவிதிகள், ஒருபோதும் அனர்த்த முகாமைத்துவத்துக்கு முகம்கொடுக்க பொருத்தமானதல்ல. எனவே இந்த சட்டத்தை அனுமதித்துக்கொள்வதற்கு முன்னர், இதில் திருத்தம் மேற்கொண்டு, அனர்த்த முகாமைத்துவ நிலைமை ஒன்றுக்கு முகம்கொடுக்க முடியுமான ஒகுங்குவிதிகளை கொண்டுவர நடவடிக்கை எடுப்போம் என்றார்.
அனர்த்த நிலைமைக்கு முகம்கொடுக்க அவசரகால சட்டத்தின் ஒழுங்குவிதிகள் எந்தவகையிலும் பொருத்தமில்லை. கொண்டுவந்திருக்கும் ஒழுங்குவிதிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், மக்கள் போராட்டத்தை அடக்குவதற்காக கொண்டுவந்த ஒழுங்குவிதிகளுக்கு சமமானதாகும். அதனால் அனர்த்த முகாமைத்துவ நிலைமை ஒன்றுக்கு முகம்கொடுக்க முடியுமான ஒகுங்குவிதிகளை கொண்டுவந்து இந்த சட்டத்தை அனுமதித்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டு மென எதிர்க்கட்சி உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 06-01-2026 அன்று இடம்பெற்ற பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அனர்த்த நிலைமைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அவசரகால சட்டம் ஒன்றை கொண்டுவந்து பொறிமுறை ஒன்றை தயாரிப்பதற்கே நாட்டில் இடம்பெற்ற அனர்த்தத்துக்கு பின்னர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தீர்மானித்தோம். ஆனால் இன்று சபைக்கு சமர்ப்பித்துக்கும் அவசரகால சட்டத்தின் ஒழுங்குவிதிகளை பார்க்கும்போது, அது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒழுங்குவிதிகள், மக்கள் போராட்டத்தை அடக்குவதற்காக கொண்டுவந்த ஒழுங்குவிதிகளுக்கு சமமானதாகும்.
தற்போது கொண்டுவந்திருக்கும் ஒழுங்குவிதிகளை பார்க்கும்போது, அது அனர்த்தம் தொடர்பில் அவசரகால நிலைமை ஒன்றை பிரகடனப்படுத்துவதற்கு தேவையான பொறிமுறை ஒன்றை தயாரிப்பதற்காக கொண்டுவந்த ஒழுங்குவிதிகளாக இல்லை என்பதை பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதனால் உண்மையில் அனர்த்த நிலைமை ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டும் தேவை இருக்கும் என்றால், இந்த அவசரகால சட்டத்தை நீடிக்காமல், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அனர்த்த நிலைமைக்கு முகம்கொடுக்க முடியுமான அவசரகால சட்டம் ஒன்றை கொண்டுவருவோம்.
அனர்த்த நிலைமைக்கு முகம்கொடுக்க கருத்துரிமை சுதந்திரம் எதற்கு என கேட்கிறோம். மக்கள் போராட்டத்தின் போது, அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்போது அதுதொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தீர்ப்பில், இந்த நிலைமையில் இந்த சட்டம் சட்டவிராேம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் அனர்த்த நிலைக்கு முகம்கொடுக்க, இந்த அவசரகால சட்ட ஒழுங்குவிதிகளை அனுமதிப்பதில் சட்டப்பிரச்சினை இருக்கிறது என்றே நினைக்கிறேன். அதனால் உயர்நீதிமன்ற தீர்ப்பை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்
எனவே அரசாங்கம் தற்போது கொண்டுவந்திருக்கும் பொது மக்கள் பாதுகாப்பு சட்ட ஒழுங்குவிதிகள், ஒருபோதும் அனர்த்த முகாமைத்துவத்துக்கு முகம்கொடுக்க பொருத்தமானதல்ல. இந்த சட்டத்தை அனுமதித்துக்கொள்வதற்கு முன்னர், இதில் திருத்தம் மேற்கொண்டு, அனர்த்த முகாமைத்துவ நிலைமை ஒன்றுக்கு முகம்கொடுக்க முடியுமான ஒகுங்குவிதிகளை கொண்டுவர நடவடிக்கை எடுப்போம் என்றார்.





