பொதுநிர்வாக அமைச்சுக்கான ஒதுக்கீடு 94 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்
மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படாமை, கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாக்கெடுப்பை கோருவதாக அவர் தெரிவித்தார்.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் 94 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டன.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டது. அதன் பிரகாரம் 94 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டன.
பாராளுமன்றத்தில் 19-11-2025அன்று 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. விவாதத்தின் முடிவில் இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பி.யான சாணக்கியன் இராசமாணிக்கம் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் வாக்கெடுப்பைக் கோரினார்.
மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படாமை, கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாக்கெடுப்பை கோருவதாக அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில்லேயே நிதி ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதில் நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக அரசு உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. வாக்களித்த நிலையில் பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.





