மத்திய கிழக்கு மோதல்களே ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்குக் காரணம் - சர்வதேச நாணய நிதியம்
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை 27-05-2026 அன்று ஒப்புதல் அளித்தது.
இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை இன்னமும் அச்சுறுத்தல் நிலையிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோ, அண்மையில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிரதான காரணம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் மோதல்களும், அதன்விளைவாக உலக சந்தையில் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புமேயாகும் என்றும், அதனை சீரமைப்பதற்கு இலங்கை அதிகாரிகளால் பொருத்தமான தற்காலிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை 27-05-2026 அன்று ஒப்புதல் அளித்தது. இதனூடாக இலங்கைக்கு மேலும் 695 மில்லியன் டொலர் நிதி விடுவிக்கப்படவுள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் குறித்த தமது மதிப்பீடுகள் பற்றித் தெளிவுபடுத்தும் நோக்கில் நாணய நிதியத்தினால் நிகழ்நிலை முறைமையில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோ சுட்டிக்காட்டினார்.





