5 வருடங்களில் 13,600 தாதியர்களை இணைக்க நடவடிக்கை - அமைச்சர் நளிந்த
இலங்கையில் சுகாதார சேவையை விரிவுபடுத்தும் வழிகள் மற்றும் உலகின் அளவுகோல்களை கருத்திற்கொண்டு அடுத்த சில வருடங்களுக்கு இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளோம்.
தற்போதைய அரசாங்கத்தின் 2025 முதல் 2029 வரையான ஐந்து வருடங்களில் 13,600 தாதியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கையில் இலவச சுகாதார சேவையின் மனித வளம், மற்றும் வினைத்திறனை அதிகரிக்கும் வகையில் 515 தாதியர்களுக்கு தாதி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் உள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கை மற்றும் சேவையின் அவசியத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு கவனத்தில் எடுத்துள்ளது.
தற்போது இலங்கையில் தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்கள் சிறிது சிறிதாக நிரப்பப்பட்டு வருவதாகவும், தாதியர் பாடசாலைகளில் இருந்து கடந்த வருடம் பயிற்சி முடித்த 3441 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட எண்ணிக்கையில் கூடிய் குழுவாகவும், இன்று நியமனம் பெறும் இந்த 515 பேருடன் கடந்த வருடத்தில் 3956 பேர் சேவையில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் மேலும் 2867 பேர் தாதியர் சேவையில் உள்வாங்கப்படவுள்ளதாகவும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் புதிதாக 6823 பேர் தாதியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, 2028 ஆம் ஆண்டில் 1949 பேர் கொண்ட குழுவும், 2029 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 2920 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்படும் தாதியர் பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானப் பட்டதாரிகளாக ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டு தேவையான இலக்கை பூர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இலங்கையில் சுகாதார சேவையை விரிவுபடுத்தும் வழிகள் மற்றும் உலகின் அளவுகோல்களை கருத்திற்கொண்டு அடுத்த சில வருடங்களுக்கு இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளோம்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க இங்கு உரையாற்றுகையில், தாதியர் சேவையானது இந்நாட்டின் ஒரு தனித்துவமான சேவையாகும். அறிவியல் பிரிவில் மூன்றாம் நிலை பதவிகளுக்கான செவிலியர் பட்டதாரிகளின் இறுதியாக ஆட்சேர்ப்பு 2021-இல் நடைபெற்றது. அதன்படி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆட்சேர்ப்புகள் நடைபெறுவது ஒரு விசேட நிகழ்வாகும் என்றார்.





