சாரதி அனுமதி பத்திர கணினி கட்டமைப்பு பாதிப்பு
நவம்பர் 27,28 மற்றும் டிசெம்பர் 01 ஆகிய தினங்களில் சேவையை பெற்றுக்கொள்வதற்காக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள சேவை பெறுநர்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் எந்த தினத்திலும் (சேவை நாட்களில்) காரியாலயத்துக்கு வருகை தந்து சேவை பெற்றுக்கொள்ள கூடிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதி பத்திர கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் இன்றைய தினம் வேரஹர பிரதான காரியாலயம் மற்றும் நிகழ்நிலை முறைமையிலான மாவட்ட காரியாலயங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் முத்திரையிடல், புதிய சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான விண்ணப்பித்தல், மற்றும் புதுப்பித்தல் என்பன நிகழ்நிலை சேவைகள் இடம்பெறாதென மோட்டார் வாகனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கட்டமைப்பின் தொழில்நுட்ப கோளாறு மற்றும் சீரற்ற காலநிலை ஆகிய காரணிகளால் 2025.11.27 மற்றும் 2025.11.29 ஆகிய திகதிகளில் நடத்த முடியாமல் போன எழுத்துமூலமான பரீட்சை 2025.12.08 மற்றும் 2025.12.09 ஆகிய தினங்களில் நடத்தப்படும் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திர கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை திருத்துவதற்கு தொழில்நுட்ப பிரிவினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்றைய தினம் (2025.12.01) வேரஹர பிரதான காரியாலயம் மற்றும் நிகழ்நிலை முறைமையிலான மாவட்ட காரியாலயங்கள் ( குருநாகல், களுத்துறை, அம்பாந்தோட்டை, கம்பஹா,அநுராதபுரம், யாழ்ப்பாணம், மொனராகலை, கண்டி, காலி மற்றும் அம்பாறை) ஊடாக சாரதி அனுமதிப்பத்திரம் முத்திரையிடல், புதிய சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான விண்ணப்பித்தல், மற்றும் புதுப்பித்தல் என்பன நிகழ்நிலை சேவைகள் வழங்கப்படமாட்டாது.
வாகனங்களை பதிவு செய்தல் அல்லது உரிமம் மாற்றம் கட்டமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத காரணத்தால் அந்த சேவைகள் மற்றும் நடவடிக்கைள் வழமைபோல் இடம்பெறும்.
கட்டமைப்பின் தொழில்நுட்ப கோளாறு மற்றும் சீரற்ற காலநிலை ஆகிய காரணிகளால் 2025.11.27 மற்றும் 2025.11.29 ஆகிய திகதிகளில் நடத்த முடியாமல் போன எழுத்துமூலமான பரீட்சை 2025.12.08 மற்றும் 2025.12.09 ஆகிய தினங்களில் நடத்தப்படும். (இந்த பரீட்சையில் உங்களுக்குரிய நேரத்தை ஒதுக்கிக் கொள்ளும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்துக்கமைய பரீட்சை நடத்தப்படும்)
நவம்பர் 27,28 மற்றும் டிசெம்பர் 01 ஆகிய தினங்களில் சேவையை பெற்றுக்கொள்வதற்காக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள சேவை பெறுநர்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் எந்த தினத்திலும் (சேவை நாட்களில்) காரியாலயத்துக்கு வருகை தந்து சேவை பெற்றுக்கொள்ள கூடிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு காணப்பட்டாலும் வேரஹர மற்றும் ஏனைய காரியாலயங்களில் செயற்பாட்டு ஒத்திகை பார்த்தல்,தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை நீட்டித்தல் உட்பட ஆவணங்களை பரிசீலித்தல் உள்ளிட்ட சேவைகள் இடம்பெறும்.





