முன்னாள் அமைச்சர் நலின் பெர்னாண்டோவின் மனுவை 17ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் தீர்மானம்
இந்த மனுவானது 01-06-202 அன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான டி. குமாரரத்தினம் மற்றும் பிரதீப் ஹெட்டியாரச்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பரிசீலனைக்கு வந்தது.
கரம்போர்ட் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர் தனக்கு எதிராக தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை இரத்து செய்யக் கோரி தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் நலின் பெர்னாண்டோ தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனுவானது 01-06-202 அன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான டி. குமாரரத்தினம் மற்றும் பிரதீப் ஹெட்டியாரச்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பரிசீலனைக்கு வந்தது. இதன்போது மனுவை தாக்கல் செய்துள்ள நலின் பெர்னாண்டோ சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, மனு தொடர்பாக விளக்கங்களை நீதிமன்றில் முன்வைத்தார்.
தனது சேவைப் பெறுநருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும், அத்தண்டனையைக் கொழும்பு மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழு விதித்ததாகவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.





