முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவுகன்கு 22 வரை விளக்கமறியல்
17-08-2026 அன்று மேற்படி வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டப் போது அவர் இவ்வாறு உத்தரவிட்டிருந்தார்.
பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் அதன் மூலம் அரசாங்கத்துக்கு நட்டம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
17-08-2026 அன்று மேற்படி வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டப் போது அவர் இவ்வாறு உத்தரவிட்டிருந்தார்.
பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்திய அதன் மூலம் அரசாங்கத்துக்கு நட்டம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், சரத் வீரவன்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து சந்தேகநபர் விசாரணை அதிகாரிகளால் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய சரத் வீரவன்சவை சந்தேகநபராக பெயரிடப்படுவதாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்குமாறு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளுக்கமைய, நீதிமன்றத்தினால் அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிவான் சந்தேகநபரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டார்.





