கரைவலை மீன்பிடியை பாரம்பரிய முறையில் தொடர வேலைத்திட்டம் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
பாராளுமன்றத்தில் 03-03-2026 அன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹெக்டர் ஹப்புகாமியினால் கரைவலை மீன்பிடி துறை தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கரைவலை மீன்பிடி தொழிலில் வின்ச் மற்றும் உழவு இயந்திரத்திற்கு பதிலாக வேறு மாற்று வழிகள் இல்லையென்றால் பாரம்பரிய முறையிலேயே அதனை தொடர்வதற்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 03-03-2026 அன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹெக்டர் ஹப்புகாமியினால் கரைவலை மீன்பிடி துறை தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கரைவலை தொழில்துறை நிறுத்தப்படவில்லை. கரைவலை தொழிலாளர்கள் மீண்டும் அந்த தொழிலை தொடர்கின்றனர். ஆனால் கரை வலை இழுக்க வின்ச் இயந்திரம் மற்றும் உழவு இயந்திரத்தை பயன்படுத்துவதே நிறுத்தப்பட்டுள்ளது. உழவு இயந்திரத்தை பயன்படுத்த ஆய்வு அறிக்கை எதுவும் இன்றி முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இவ்வாறாக செய்வதால் சிறிய மீன்பிடி படகு மீனவர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பானது என்பதனால் 6 மாதங்களுக்கு முன்னர் இதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி தீர்மானங்கள் எடுத்து வேறு வழியை தேடுமாறு கோரியிருந்தோம். இப்போது அது தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தொடர்ந்தும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். அதன்போது வின்ச் மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்குவதா? அல்லது வேறு முறை இருக்கின்றதா? என்று ஆராயப்படும். இல்லையென்றால் பாரம்பரிய முறையிலேயே கரைவலை தொழில்துறையை அவ்வாறே தொடர்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.





