துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு குறித்து மீளாய்வு
யாழ்ப்பாண விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தை நவீனமயமாக்கி, அங்குள்ள வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
விமான நிலையங்களில் சிவில் பயணிகள் செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது விமானப்படையுடன் ஒருங்கிணைந்து மிகவும் திறமையான ஒரு பொறிமுறையை தயாரிப்பதற்கும், ஒவ்வொரு விமான நிலையத்தினதும் தேவைகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து கூட்டு மறுஆய்வொன்றை மேற்கொண்டு அது குறித்த மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மத்தள விமான நிலையம் தற்போது நாளொன்றுக்கு 6-7 மில்லியன் ரூபா வரையிலும்,அதாவது வருடத்திற்கு சுமார் 4 பில்லியன் ரூபா வரையிலும் நட்டமடைந்து வருவதாக வெளிப்படுத்தப்பட்டதுடன், இந்த நிலையைத் தவிர்ப்பதற்கான மாற்று முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்கீழ், மத்தள விமான நிலையத்திற்கான முதலீட்டு முன்மொழிவுகள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும், 2027ஆம் ஆண்டளவில் அதற்குரிய பணிகளை நிறைவு செய்ய முடியும் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.இதேவேளை, யாழ்ப்பாண விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தை நவீனமயமாக்கி, அங்குள்ள வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்தான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைஈ விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனம் சிலோன் ஷிப்பிங் கோப்பரேஷன், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கா கேட்டரிங், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, வர்த்தக கப்பல் செயலகம், இலங்கை துறைமுக மேலாண்மை மற்றும் ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனம், ஜெயா கன்டெய்னர் டெர்மினல்ஸ் லிமிடெட், ஆகிய நிறுவனங்களின் செயல்பாடுகள், 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இங்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் துறைமுக அதிகாரசபையின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை துறைமுக அபிவிருத்தித் திட்டம், காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்களை ஜனாதிபதி அவர்கள் கண்காணித்தார். மேலும், கொழும்பு துறைமுகத்தின் லாஜிஸ்டிக் பார்க் , தெற்கு துறைமுகத்தின் அலைதாங்கியை நீடித்தல் மற்றும் மேற்கு முனையத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துதல், செயல்திறனை அதிகரிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், 2055 ஆம் ஆண்டளவில் வருடாந்த பயணிகள் திறனை 24.2 மில்லியனாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஏற்றவாறு 3 ஆண்டுகளில் நிறைவு செய்யப்படவுள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தித் திட்டம் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.2027 ஆம் ஆண்டில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் உள்ள வருகை மற்றும் புறப்பாடு முனையங்களை விரிவாக்கம் செய்தல்இ புதிய முனையத்தை நிர்ணயித்தல் மற்றும் டிப்போ விரிவாக்கப் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஒட்டிய பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை முறைப்படுத்தியதாகவும் செயல்திறன் மிக்கதாகவும் மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.மேலும், அனைத்து விமான நிலையச் சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்காக, டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
ஹிங்குரக்கொட உள்ளிட்ட உள்நாட்டு விமான நிலையங்களின் அபிவிருத்திப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த விமான நிலையங்களில் சிவில் பயணிகள் செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது விமானப்படையுடன் ஒருங்கிணைந்து மிகவும் திறமையான ஒரு பொறிமுறையை தயாரிப்பதற்கும், ஒவ்வொரு விமான நிலையத்தினதும் தேவைகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து கூட்டு மறுஆய்வொன்றை மேற்கொண்டு அது குறித்த மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மத்தள விமான நிலையம் தற்போது நாளொன்றுக்கு 6-7 மில்லியன் ரூபா வரையிலும்,அதாவது வருடத்திற்கு சுமார் 4 பில்லியன் ரூபா வரையிலும் நட்டமடைந்து வருவதாக இங்கு வெளிப்படுத்தப்பட்டதுடன், இந்த நிலையைத் தவிர்ப்பதற்கான மாற்று முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்கீழ், மத்தள விமான நிலையத்திற்கான முதலீட்டு முன்மொழிவுகள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும், 2027ஆம் ஆண்டளவில் அதற்குரிய பணிகளை நிறைவு செய்ய முடியும் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.இதேவேளை, யாழ்ப்பாண விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தை நவீனமயமாக்கி, அங்குள்ள வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
நிறுவனங்கள் தங்களின் நிதி வலிமையைப் பயன்படுத்தி, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை முகாமைத்துவம் செய்து, மக்களின் வரிப்பணத்திற்கு சுமையாக அமையாத வகையில் திறைசேரிக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.





