Breaking News
கியூபெக்கில் 2 குழந்தைகளை மூழ்கடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனையும், 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிப்பு
மார்ச் மாதத்தில் கமல்ஜித் தண்டிக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் அவையாகும்.
கமல்ஜித் அரோராவுக்கு 2022 ஆம் ஆண்டில் தனது 13 வயது மகள் மற்றும் 11 வயது மகனை கொலை செய்ததற்காக 25 ஆண்டுகள் சிறை விடுப்புச் (பரோல்) சாத்தியக்கூறு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த தண்டனைக்கு, தனது மூத்த மகளை கொலை செய்ய முயற்சித்ததற்காக எட்டு ஆண்டுகளையும், அவரது முன்னாள் மனைவியின் கழுத்தை நெரித்ததற்காக ஒரு வருடமும் ஆகச் சேர்த்து, நீதிபதி அலெக்ஸாண்டர் பியன்-ஐமே பாஸ்டியன் தண்டனையை அதிகரித்தார். மார்ச் மாதத்தில் கமல்ஜித் தண்டிக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் அவையாகும்.
அக்டோபர் 17, 2022 அன்று தனது இளைய குழந்தைகளை குளியல் தொட்டியில் மூழ்கடித்ததற்காக இப்போது 49 வயதான அரோரா முதல் நிலை கொலை குற்றவாளி என்றும் ஜூரி கண்டறிந்தது. பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் வெளியீட்டு தடையால் மூடப்பட்டுள்ளன.





