Home » சட்டம் & அரசியல் » துருக்கி மீது டிரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடை

துருக்கி மீது டிரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடை

பிற நாடுகளும் கவனத்தில் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கிறிஸ்டோபர் போர்டு கூறி உள்ளார்.

👤 Sivasankaran16 Dec 2020 4:46 PM GMT
துருக்கி மீது டிரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடை
Share Post

ரஷிய தயாரித்த எஸ் 400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வாங்குவதற்காக துருக்கி மீது டிரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும் ரஷியா உற்பத்தி செய்யும் ஆயுதங்களை வாங்குவது குறித்து இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா முழுமையாக அமல்படுத்தும் என்பதையும், ரஷிய ஆயுதங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்பதையும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளும் கவனத்தில் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கிறிஸ்டோபர் போர்டு கூறி உள்ளார்.