அவசரகாலநிலையை நீடிப்பதற்கு சபை அனுமதி
விவாதத்தின் முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் 2026.02.28ஆம் திகதிய 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிமூலம் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட அவசரகாலநிலையை நீடிப்பதற்கு 100மேலதிக வாக்குகளால் சபை அனுமதியளித்தது.
பாராளுமன்றத்தில் 06-03-2026 அன்று பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2026.02.28 ஆம் திகதிய 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட அவசரகாலநிலையை நீடிப்பதற்கான விவாதம் இடம்பெற்றது .விவாதத்தின் முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார்.
இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் அவசரகாலநிலையை நீடிப்பதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 8வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 100 மேலதிக வாக்குகளினால் அங்கீகாரமளிக்கப்பட்டது.
இதில் அவசரகாலநிலையை நீடிப்பதற்கு ஆதரவாக அரசாதரப்பினர் வாக்களித்த நிலையில் எதிராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக்கட்சி . ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் ஆகிய காட்சிகள் எதிர்த்து வாக்களித்தன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி,புதிய ஜனநாயக முன்னணி . ஐக்கிய தேசியக்கட்சி, தொழில் கட்சி, அர்ச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சைக்குழு 17ஆகிய கட்சிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.





