இலங்கைக்கு உலக வங்கி வழங்கிவரும் பல்தரப்பு ஒத்துழைப்பு: அமைச்சர் விஜித்த ஹேரத்
பரமேஸ்வரன் ஐயரின் பதவிக்காலத்தில் அவர் இலங்கைக்கு ஆற்றிய பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்ததாக விஜித்த ஹேரத் அவரது எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு உலக வங்கி வழங்கிவரும் பல்தரப்பு ஒத்துழைப்புக்கும், தற்போதைய அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு அளித்துவரும் ஆதரவுக்கும் உலக வங்கி குழுமத்தின் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான நிறைவேற்றுப்பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயரிடம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.
உலக வங்கி குழுமத்தின் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான நிறைவேற்றுப்பணிப்பாளராகப் பணியாற்றிய பரமேஸ்வரன் ஐயர், அவரது பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டைவிட்டுப் புறப்படவிருக்கும் நிலையில், அதன் ஓரங்கமாக அவர் 02-02-2026 அன்று ) வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது இலங்கைக்கு உலக வங்கி வழங்கிவரும் பல்தரப்பு ஒத்துழைப்புக்கும், தற்போதைய அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு அளித்துவரும் ஆதரவுக்கும் தனது நன்றியை வெளிப்படுத்தியதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பரமேஸ்வரன் ஐயரின் பதவிக்காலத்தில் அவர் இலங்கைக்கு ஆற்றிய பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்ததாக விஜித்த ஹேரத் அவரது எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 'தித்வா' சூறாவளி அனர்த்தத்தின் பின்னரான தேவைப்பாட்டு மதிப்பீடு மற்றும் இலங்கையுடனான ஒத்துழைப்பு செயற்திட்டம் என்பன உள்ளடங்கலாக இருதரப்பினரும் இணைந்து முன்னெடுத்துவரும் ஏனைய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.





