ஜனாதிபதி அநுர, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை சாட்சியாளராக அழையுங்கள் - விசேட செயற்குழு உறுப்பினர்கள் கோரிக்கை
விசேட செயற்குழுவின் உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, தயாசிறி ஜயசேகர,முஜிபூர் ரஹ்மான் மற்றும் டி.வி. சானக ஆகியோர் குழுவின் தலைவரான நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் பௌதிக பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடும் பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமைச்சர் பிமல் ரத்நாயக்க,பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோரை சாட்சியாளராக அழைக்குமாறு குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விசேட செயற்குழுவின் உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, தயாசிறி ஜயசேகர,முஜிபூர் ரஹ்மான் மற்றும் டி.வி. சானக ஆகியோர் குழுவின் தலைவரான நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்வலன்கள் பௌதிக பரிசோதனைகளின்றி,விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு நிதி திட்டமிடல்,பொருளாதார அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,பிரதி அமைச்சராக பதவி வகித்த ருவான் கொடித்துவக்கு, மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோர் சாட்சியமளிப்பதற்கு சாட்சியாளர்களாக அழைக்கப்பட வேண்டும்.
அதேபோல் குறித்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் சுங்கத் திணைக்களத்தின் தொடர்பு குறித்து மற்றும் இந்த செயற்குழுவின் விடயதானங்களுக்குட்பட்ட விடயங்கள் குறித்து நிதியமைச்சர் என்ற அடிப்படையால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் இந்த செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.





