நட்ட ஈட்டை வழங்குவதற்கு அரசாங்கத்திடம் நிதியில்லை: ஐ.தே.க.பொதுச்செயலாளர்
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள நட்டஈட்டு தொகையை வழங்குவதற்கு 360 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. ஆனால் இதுவரை அரசாங்கத்துக்கு 6பில்லியன் ரூபா கூட பணமாக கிடைக்கவில்லை. அதனால் சர்வதேசத்திடம் கலந்துரையாடி மக்களுக்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், சுனாமிக்கு பின்னர் நாட்டில் இயற்கை அனர்த்தம் ஏற்படும்போது அதுதொடர்பில் முன்கூட்டி நடவடிக்கை எடுப்பது மற்றும் அனர்த்தத்துக்கு பின்னர் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என 2023 தாெடக்கம் 2030 வரையான வேலைத்திட்டம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாரித்திருந்தார். அந்த திட்டத்தை கடந்த ஜூன் மாதம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொது அறிக்கையாக வெளியிட்டு வைத்தார். இவ்வாறான நிலையிலே நவம்பர் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து உண்மையில் கவலையடைகிறேன். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும்போது சர்வதேச காலிநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ள சென்றபோது, அப்போது எதிர்க்கட்சியில் இருந்த அநுரகுமார திஸாநாயக்க, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தார். நாங்கள் கிணற்று தவலை போல் இருக்க முடியாது. அதனால்தான் ரணில் விக்ரமசிங்க அனர்த்தம் தொடர்பில் 2023ல் வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்தார். ஆனால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு அதன் பிரகாரம் செயற்பட முடியாமல் போயிருக்கிறது. பொதுவாக தற்போதைய ஆட்சியாளர்கள் மற்றவர்களின் ஆலாேசனை, கருத்துக்களை கேட்பதற்கு விரும்பம் இல்லை. அது அவர்களுக்கு கெளரவ பிரச்சினை. அதேநேரம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் பாதிப்புக்கு அமைய நட்டஈடு வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். காணி மற்றும் வீடு இழந்தவர்களுக்கு ஒருகோடி ரூபா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. காணி, வீடு இழந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்ளா என பார்க்க வேண்டும். ஏனெனில் அவர்களை பாதுகாக்க அரசாங்கம் முன்னாயத்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோன்று தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் தேர்தல் காலத்தில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தார்கள்.இவர்கள் தெரிவித்த ஒன்றாவது இடம்பெற்றிக்கிறதா என கேட்கிறேன். இவ்வாறான நிலையில் தற்போது இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடாக வழங்குவதாக பாரியதொரு தொகையை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் அறிவிப்பின் பிரகாரம் நட்டஈடு வழங்குவதற்கு மாத்திரம் 360 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. அனர்த்த உதவியாக தற்போது வெளிநாடுகளில் இருந்து எமக்கு கிடைத்து வருகிறது. அந்த உதவிகள் அனைத்தும் பெரும்பாலும் மனிதாபிமான உதவிகளாகவே இருக்கின்றன. பணமாக இதுவரை 6பில்லியன் ரூபா கூட நன்கொடையாக கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் தெரிவித்த நட்டஈட்டு தொகையை எவ்வாறு வழங்க முடியும். வெளிநாடுகளில் இருந்து கடன் பெறுவதாக இருந்தால், அரசாங்கம் ஒன்று எதற்கு என்றே அப்போது இவர்கள் கேட்டார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு செயற்படப்போவதில்லை. அதனால் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியுடன் கலந்துரையாடி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள நட்டஈட்டு தொகையை வழங்குவதற்கு 360 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. ஆனால் இதுவரை அரசாங்கத்துக்கு 6பில்லியன் ரூபா கூட பணமாக கிடைக்கவில்லை. அதனால் சர்வதேசத்திடம் கலந்துரையாடி மக்களுக்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், சுனாமிக்கு பின்னர் நாட்டில் இயற்கை அனர்த்தம் ஏற்படும்போது அதுதொடர்பில் முன்கூட்டி நடவடிக்கை எடுப்பது மற்றும் அனர்த்தத்துக்கு பின்னர் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என 2023 தாெடக்கம் 2030 வரையான வேலைத்திட்டம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாரித்திருந்தார்.
அந்த திட்டத்தை கடந்த ஜூன் மாதம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொது அறிக்கையாக வெளியிட்டு வைத்தார். இவ்வாறான நிலையிலே நவம்பர் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து உண்மையில் கவலையடைகிறேன்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும்போது சர்வதேச காலிநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ள சென்றபோது, அப்போது எதிர்க்கட்சியில் இருந்த அநுரகுமார திஸாநாயக்க, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தார். நாங்கள் கிணற்று தவலை போல் இருக்க முடியாது. அதனால்தான் ரணில் விக்ரமசிங்க அனர்த்தம் தொடர்பில் 2023ல் வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்தார். ஆனால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு அதன் பிரகாரம் செயற்பட முடியாமல் போயிருக்கிறது. பொதுவாக தற்போதைய ஆட்சியாளர்கள் மற்றவர்களின் ஆலாேசனை, கருத்துக்களை கேட்பதற்கு விரும்பம் இல்லை. அது அவர்களுக்கு கெளரவ பிரச்சினை.
அதேநேரம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் பாதிப்புக்கு அமைய நட்டஈடு வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். காணி மற்றும் வீடு இழந்தவர்களுக்கு ஒருகோடி ரூபா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. காணி, வீடு இழந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்ளா என பார்க்க வேண்டும். ஏனெனில் அவர்களை பாதுகாக்க அரசாங்கம் முன்னாயத்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோன்று தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் தேர்தல் காலத்தில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தார்கள்.இவர்கள் தெரிவித்த ஒன்றாவது இடம்பெற்றிக்கிறதா என கேட்கிறேன். இவ்வாறான நிலையில் தற்போது இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடாக வழங்குவதாக பாரியதொரு தொகையை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் அறிவிப்பின் பிரகாரம் நட்டஈடு வழங்குவதற்கு மாத்திரம் 360 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது.
அனர்த்த உதவியாக தற்போது வெளிநாடுகளில் இருந்து எமக்கு கிடைத்து வருகிறது. அந்த உதவிகள் அனைத்தும் பெரும்பாலும் மனிதாபிமான உதவிகளாகவே இருக்கின்றன. பணமாக இதுவரை 6பில்லியன் ரூபா கூட நன்கொடையாக கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் தெரிவித்த நட்டஈட்டு தொகையை எவ்வாறு வழங்க முடியும்.
வெளிநாடுகளில் இருந்து கடன் பெறுவதாக இருந்தால், அரசாங்கம் ஒன்று எதற்கு என்றே அப்போது இவர்கள் கேட்டார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு செயற்படப்போவதில்லை. அதனால் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியுடன் கலந்துரையாடி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





