பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல
உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட 'பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)' எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை சபைக்கு அறிவிக்க விரும்புகிறேன்.
பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படுவதில்லை. ஆகவே சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் 06-02-2026 அன்றுகூடிய போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவித்த சபாநாயகர், அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட 'பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)' எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை சபைக்கு அறிவிக்க விரும்புகிறேன்.
இந்த சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படுவதில்லையென்பதால் அதனைப் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென அறிவிக்கிறேன் என்றார்.





