ரியாத், டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்தது ஸ்ரீலங்கன்ஸ் எயா லைன்ஸ்
ரியாத் நகருக்கான விமான சேவைகள் 09-03-2026 அன்று இரவு முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதுடன், டுபாய்க்கான சேவைகள் இன்று செவ்வாய்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான நாளாந்த விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன்ஸ் எயா லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, ரியாத் நகருக்கான விமான சேவைகள் 09-03-2026 அன்று இரவு முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதுடன், டுபாய்க்கான சேவைகள் இன்று செவ்வாய்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
மத்திய கிழக்கின் தற்போதைய நிலைவரங்களை அதிகாரிகள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய நேற்றைய தினம் யு.எல்.265 விமானம், கொழும்பு – ரியாத்துக்கும், யு.எல்.266 விமானம் ரியாத் – கொழும்புக்கும், யு.எல்.231 விமானம் கொழும்பு – துபாய்க்கும், யு.எல்.232 விமானம் துபாய் – கொழும்புக்கும் இயக்கப்பட்டன.





