2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும்.
2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரமாகும், அதேபோல் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும்
2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் இதற்கமைய, பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை நடத்தப்படும்.
முதலாம் பகுதி வினாத்தாளை முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.





