286 டொலருக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்படவில்லை - பிரதி அமைச்சர்
அண்மையில் 71.99 டொலருக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டது. எதிர்வரும் 29 ஆம் திகதி 71 டொலர் என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்படும்.
மத்திய கிழக்கு நிலைவரத்தை முன்னிலைப்படுத்தி மாற்றமடையும் விலைக்கு அமைவாகவே மசகு எண்ணெய் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே 286 டொலருக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்படவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறோமென வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 17-04-2026 அன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 22 நிலக்கரி கப்பல்கள் நாட்டுக்கு வருகைத் தரவள்ளன. கடந்த வாரம் இரண்டு நிலக்கரி கப்பல்கள் நாட்டுக்கு வந்தன. ஏனைய நிறுவனங்களில் அவசர கொள்வனவு ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட 05 நிலக்கரி கப்பல்களும் எதிர்வரும் காலப்பகுதியில் தாமதமில்லாமல் நாட்டுக்கு வருகைத் தரவள்ளன.
அனல் மின்நிலையத்தின் பணிகள் சிறந்த முறையில் இடம்பெறுகின்றன. எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆகவே மின்விநியோக தடை ஏற்படாது. 286 டொலருக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் தவறானது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த செய்தியை மறுத்து விடயங்களை தெளிவுப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அண்மையில் 71.99 டொலருக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டது. எதிர்வரும் 29 ஆம் திகதி 71 டொலர் என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்படும். எதிர்வரும் மே மாதம் 113 டொலருக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்படும்.
மத்திய கிழக்கு நிலைவரத்தை முன்னிலைப்படுத்தி மாற்றமடையும் விலைக்கு அமைவாகவே மசகு எண்ணெய் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே 286 டொலருக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்படவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.





