பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கை 70,000 ஐ தாண்டியது
அக்டோபர் 10 ஆம் தேதி சமீபத்திய போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போர் நிறுத்த மீறல்கள் என்று கூறப்பட்டதற்கு விடையிறுப்பாக இஸ்ரேல் இன்னும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 70,000 ஐ தாண்டியுள்ளது என்று காசாவின் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஒரு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அக்டோபர் 10 ஆம் தேதி சமீபத்திய போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போர் நிறுத்த மீறல்கள் என்று கூறப்பட்டதற்கு விடையிறுப்பாக இஸ்ரேல் இன்னும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் போரின் ஆரம்பத்தில் இருந்து சடலங்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்படுகின்றன.
பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை இப்போது 70,100 ஆக இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அமைச்சகம் ஹமாஸ் நடத்தும் அரசாங்கத்தின் கீழ் செயல்படுகிறது. இது மருத்துவ நிபுணர்களால் பணியமர்த்தப்படுகிறது. பன்னாட்டுச் சமூகத்தால் பொதுவாக நம்பகமானதாகக் கருதப்படும் விரிவான பதிவுகளைப் பராமரிக்கிறது.





