நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - 28 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு
நீர்கொழும்பு சட்டவைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகளைத் திறந்த நீதிமன்றில் வாசித்துக் காண்பித்தபோதே நீதிவான் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது உயிரிழந்த 28 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவர்களில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும், 11 பேர் கூர்மையற்ற ஆயுதங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினாலும் உயிரிடைந்துள்ளதாக நீர்கொழும்பு பிரதான நீதிவான் சிலானி பெரேரா திறந்த நீதிமன்றில் 23-07-2026 அன்று பகிரங்கமாக அறிவித்தார்.
நீர்கொழும்பு சட்டவைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகளை திறந்த நீதிமன்றில் வாசித்துக் காண்பித்தபோதே நீதிவான் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
பிரேத பரிசோதனை அறிக்கையை வாசித்து காண்பிப்பதற்கு முன்னர் நீதிவான் சிலானி பெரேரா, இவ்வாறானதொரு வழக்கில் மரணப் பரிசோதனை தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கே காணப்படுவதோடு, நீதிமன்றம் சுயாதீனமானது . பொலிஸார் என்பது நீதிமன்றம் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், மரணப் பரிசோதனை அறிக்கைகள் நீதிமன்றத்தில் பகிரங்கமாக வெளியிடப்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் மரணப் பரிசோதனை அறிக்கைகள் வெளிப்படுத்தியதன் பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் என நீதிமன்றம் எவரையும் தனித்தனியாக கவனத்திற் கொள்ளவில்லை. அனைவரும் சமமான முறையில் நீதியை நிலைநாட்டுவதே நீதிமன்றத்தின் கடமை என நீதிவான் சிலானி பெரேரா வலியுறுத்தினார்.





