2026 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகளில் மிரிஸ்ஸ, பெந்தோட்டை கடற்கரைகள் இடம்பிடித்தது
இந்த தளத்தில் உள்ள எட்டு மில்லியனுக்கும் அதிகமான பட்டியல்களில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவை மட்டுமே இந்த அங்கீகாரத்தைப் பெறுகின்றன.
இலங்கையின் மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை கடற்கரைகள் 2026 ஆம் ஆண்டிற்கான பயணிகளின் ஆகச் சிறந்த கடற்கரைகளின் விசேட தரவரிசையில், "ட்ரிப் எட்வைசர்" வெளியிட்ட ஆசியாவின் சிறந்த கடற்கரை சுற்றுலா தலங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
"மிரிஸ்ஸ கடற்கரை" பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. அதேவேளை "பெந்தோட்டை கடற்கரை" ஆசியா முழுவதும் உள்ள கடற்கரைகளில் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது.
"ட்ரிப் எட்வைசர்" வழங்கும் என்ற அங்கீகாரம் பயணத்துறையில் வழங்கப்படும் பயணிகளின் ஆகச் சிறந்த கடற்கரைக்கான விருதானது சுற்றுலாத் துறையில் மிக உயரிய விருதாகும். இந்த விருதானது, 12 மாத காலப்பகுதியில் பயனர்களிடமிருந்து அதிக அளவில் சிறந்த கருத்துரைகள் மற்றும் உயர்ந்த மதிப்பீடுகளைப் பெறும் இடங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தளத்தில் உள்ள எட்டு மில்லியனுக்கும் அதிகமான பட்டியல்களில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவை மட்டுமே இந்த அங்கீகாரத்தைப் பெறுகின்றன.
மிரிஸ்ஸ கடற்கரையில் அதன் அழகிய மணற்கரைகள் மற்றும் தெளிவான நீரால் பிரபல்யமானதுடன் சூரிய அஸ்தமன வேளையில் தென்னந்தோப்பு குன்றிலிருந்து கடலை ரசிப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிக பிடித்தமானதொன்றாகும். பெந்தோட்டை கடற்கரையானது நீர் விளையாட்டு செயல்பாடுகளுக்கு பிரசித்தி வாய்ந்ததாகும்.
இதன்படி, தாய்லாந்தின் "பனானா கடற்கரை" இந்த ஆண்டில் ஆசியாவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.





