Home » கேளிக்கை » பிகில் படத்தின் இசை வெளியீடு எப்போது?

பிகில் படத்தின் இசை வெளியீடு எப்போது?

அட்லீ இயக்கத்தில் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. இந்த படம், பெண்கள் கால்பந்து...

👤 Sivasankaran12 Sep 2019 6:26 PM GMT
பிகில் படத்தின் இசை வெளியீடு எப்போது?
Share Post

அட்லீ இயக்கத்தில் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதுவரை படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ள நிலையில் செப்டம்பர் மாதம் முழுக்க படம் குறித்த அப்டேட்ஸ் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. வரும் 19ம் திகதி இசை வெளியீடு நடக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.