விதைப்புரை அறிக்கைக்கு அமைய மாகாண சபைத் தேர்தல் - அமைச்சர் சந்தன அபேரத்ன
நீண்ட இடைவெளி மற்றும் கலந்துரையாடலின் பின்னர் மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்றத்தில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்று பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட்டு, பாராளுமன்ற விசேட குழு விதப்புரை அறிக்கை சமர்ப்பித்தவுடன், அந்த அறிக்கைக்கு அமைய மாகாணசபைத் தேர்தல் விரைவாக நடத்தப்படும் என்று பொதுநிர்வாகம் , மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
கண்டியில் 09-03-2026அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது,கடந்த அரசாங்கங்கள் தேர்தல் முறைமையில் ஏற்படுத்திய சிக்கலால் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளி மற்றும் கலந்துரையாடலின் பின்னர் மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்றத்தில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பொதுவான இணக்கப்பாட்டுக்கு வந்துதவுடன் குழுவின் அறிக்கைக்கு அமைய மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. நடைமுறையில் காணப்படும் சிக்கல்களுடன் தேர்தலை நடத்தினால் முரண்பாடுகள் மாத்திரமே மிகுதியாகும்.ஆகவே சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காகவே குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.





