1,282 புதிய தொழுநோயாளர்களில் 10 சதவீதமானோர் சிறுவர்கள்
தொற்றுக்குள்ளான ஒருவரிடம் நோய் தாமதமாகக் கண்டறியப்படும் போது, அவரிடமிருந்து ஏனையவர்களுக்கும் நோய் பரவுகிறது.
சமூகத்தில் உள்ள ஒவ்வொரு 10 ஆயிரம் பேரிலும் ஒருவர் தொழுநோயாளியாகக் காணப்படுகின்றார். அந்த வகையில் கடந்த வருடம் மாத்திரம் நாட்டில் 1282 புதிய தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 10 சதவீதமானோர் 15 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என தொழுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் சமூக வைத்திய நிபுணர் யசோதா வீரசேகர தெரிவித்தார்.
சர்வதேச தொழுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் 22-01-2026அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தொழுநோய் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் எதிர்வரும் 25ஆம் திகதி சர்வதேச தொழுநோய் தினமாகும். தொழுநோய் இன்னும் சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்கப்படவில்லை.
கடந்த வருடம் மாத்திரம் நாட்டில் 1282 புதிய தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 10 சதவீதமானோர், அதாவது 123 பேர் 15 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் எனத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 8 சதவீதமானோர் நோயின் நாட்பட்ட நிலையில் அங்கவீணர்களாக அல்லது உடல் பலவீனமடைந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தனர்.
தொற்றுக்குள்ளான ஒருவரிடம் நோய் தாமதமாகக் கண்டறியப்படும் போது, அவரிடமிருந்து ஏனையவர்களுக்கும் நோய் பரவுகிறது. நாட்டில் பரவி வரும் இந்தத் தொற்றைத் தடுக்கப் புதிய நோயாளர்களை விரைவாகக் கண்டறிய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தொற்றாளருடன் நீண்டகாலமாக நெருங்கிப் பழகும் குடும்பத்தினர், அயலவர்கள் மற்றும் பணிபுரியும் இடத்தில் உள்ளவர்களே இத்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
தொழுநோய் தொடர்பாகச் சமூகத்தில் நிலவி வரும் தவறான புரிதல்கள் காரணமாக, தொற்றாளர்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், நோயாளர்கள் தயக்கங்களை விடுத்துத் தாமாக முன்வந்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்றார்.