அனர்த்த நிவாரணப் பணிகளை வலுப்படுத்த தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தயார்: இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இராஜாங்க அமைச்சர்
இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' என்ற கொள்கையில் இலங்கை ஒரு முக்கிய மையமாக இருப்பதாக இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இராஜாங்க அமைச்சர் அனுபிரியா படேல் இங்கு தெரிவித்தார்.
'தித்வா' சூறாவளியின் பின்னர் இலங்கை அரசாங்கம் அனர்த்தத்திற்கு பிந்தைய பணிகளை வலுப்படுத்துவதற்காக முன்னெடுத்த திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு வழங்கி வருவதுடன், எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாக வழங்குவதாக தயார் என இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இராஜாங்க அமைச்சர் அனுபிரியா படேல் உறுதியளித்துள்ளார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸமற்றும் இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இராஜாங்க அமைச்சர் அனுபிரியா படேல் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்றது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது சர்வதேசமாநாட்டுக்கு இணைவாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சுகாதார ஒத்துழைப்புகள் குறித்தும், எதிர்வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நம்பிக்கைக்குரிய பங்காளிகளாக அர்ப்பணிப்புடன் செயற்படுவது குறித்து கலந்துறையாடப்பட்டது.
இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' என்ற கொள்கையில் இலங்கை ஒரு முக்கிய மையமாக இருப்பதாக இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இராஜாங்க அமைச்சர் அனுபிரியா படேல் இங்கு தெரிவித்தார்.
'தித்வா' சூறாவளியின் பின்னர் இலங்கை அரசாங்கம் அனர்த்தத்திற்கு பிந்தைய பணிகளை வலுப்படுத்துவதற்காக முன்னெடுத்த திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு வழங்கியதாகவும், எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாக வழங்குவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவு வலுவானது . இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களின் போது சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்புக்காக இலங்கை மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இங்கு குறிப்பிட்டிருந்தார்.
இலங்ககை முகங்கொடுத்திருந்த அவசர அனர்த்த நிலைமையின் போது இந்திய அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றிதெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும், இலங்கையின் சுகாதாரச் சேவை மற்றும் அரசாங்கத்தின் எதிர்காலப் பணிகளை வலுப்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்பத் திட்டங்களை மேலும் மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்.





