மூலதனச் செலவுகளுக்காக 2,000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு - அமைச்சர் நளிந்த தெரிவிப்பு
இவ்வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில், மூலதனச் செலவுகளுக்காக அதிகூடிய தொகையான சுமார் 2,000 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பட்டுள்ளது.
இவ்வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில், மூலதனச் செலவுகளுக்காக அதிகூடிய தொகையான சுமார் 2,000 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய எதிர்பார்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யுனானி உள்ளிட்ட மருத்துவப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 402 பேருக்கான பயிற்ச்சி நியமனக் கடிதங்கள் 29-04-2026 அன்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வாறு நியமனம் பெற்ற 402 பேரில் 249 பேர் ஆயுர்வேத பிரிவையும், 109 பேர் சித்த மருத்துவ பிரிவையும், 44 பேர் யுனானி பிரிவையும் சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஒரு வருட காலத்திற்கு போதனா வைத்தியசாலைகள், ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களின் நேரடி மேற்பார்வையில் பயிற்சியினைப் பெறுவர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, அபிவிருத்தி அடைந்து வரும் இலங்கைக்கு நிதி ஒழுக்கம் மிகவும் அவசியமானது. "தித்வா" சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளை மீளக் கட்டியெழுப்ப, பொதுமக்கள் மீது வரிச் சுமையை சுமத்தாமல் திறைசேரியிலிருந்து 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய முடிந்தது. அத்துடன், இவ்வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில், மூலதனச் செலவுகளுக்காக அதிகூடிய தொகையான சுமார் 2,000 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பட்டுள்ளது.
சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சுகாதார துறையின் ஆட்சேர்ப்பு முறைகளிலும் மாற்றங்கள் அவசியமாகும், அத்துாடு உயர் கல்வி அமைச்சினால் பட்டம் வழங்கப்படும் அனைத்துப் பட்டதாரிகளையும் சுகாதார அமைச்சு நேரடியாக உள்வாங்கும் நிலை இனி இருக்காது . தேவையின் அடிப்படையிலேயே பயிற்சிகள் வழங்கப்படும் . இந்த விதிமுறை மிக விரைவில் மேற்கத்திய மருத்துவப் பட்டதாரிகளுக்கும் அமல்படுத்தப்படும். எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட முறையியலின் கீழேயே அரச சேவைக்குள் நுழைய வேண்டியிருக்கும் என்றார்.





