குடியிருப்பாளர்களை பாதுகாத்தல் மற்றும் வாடகை நீக்கல் புதிய சட்டமூலங்களாக முன்வைக்க நடவடிக்கை
இரண்டு சட்டமூலங்கள் தொடர்பாக முறையான தீர்மானங்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
குடியிருப்பாளர்களை பாதுகாத்தல் ' மற்றும் ' வாடகை (நீக்கல்)' ஆகிய சட்டமூலங்கள் ஒரு நிபுணத்துவ குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்படும். அவற்றை புதிய சட்டமூலங்களாக முன்வைக்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நீதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபருக்கு வழங்கிய கடிதத்தின் அடிப்படையில் அளித்த உறுதிமொழிகளைக் கருத்தில் கொண்டு, மனுதாரர்கள் தங்கள் மனுக்களை மீளப்பெற்றனர். அதற்கமைய இரண்டு சட்டமூலங்கள் தொடர்பாக முறையான தீர்மானங்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் 17-02-2026 அன்று நடைபெற்ற அமர்வின் போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் அறிவித்ததாவது: அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட 'குடியிருப்பாளர்களை பாதுகாத்தல்' மற்றும் ' வாடகை (நீக்கல்)' எனும் சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன்.
'குடியிருப்பாளர்களை பாதுகாத்தல் ' மற்றும் ' வாடகை (நீக்கல்)' என்ற தலைப்பிலான சட்டமூலங்கள் தற்போதைய வடிவத்தில் தொடரப்படாது, மாறாக ஒரு நிபுணத்துவ குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும், அவற்றை புதிய சட்டமூலங்களாக முன்வைக்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் 06.02.2026 ஆம் திகதியன்று நீதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபருக்கு வழங்கிய கடிதத்தின் அடிப்படையில் அளித்த உறுதிமொழிகளைக் கருத்தில் கொண்டு, மனுதாரர்கள் தங்கள் மனுக்களை மீளப்பெற்றனர்.
அதன்படி, அரசியலமைப்பின் 121(3) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 'குடியிறுப்பாளர்களைப் பாதுகாத்தல்' மற்றும் 'வாடகை (நீக்கல்)' என்ற இரண்டு சட்டமூலங்கள் தொடர்பாக முறையான தீர்மானங்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென குறிப்பிட்டார்.





