கைதான யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவித்த நீதிவான், அவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்து கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
தகைமைகளை மாற்றியமைத்து கடற்படையின் நிறைவேற்று அதிகாரியாக இணைந்து, பிரித்தானிய கடற்படை அக்காடமியின் பயிற்சிப் பாடநெறிக்காக அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் 17-06-2026 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதற்கமைய, சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவித்த நீதிவான், அவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்து கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் பிணையாளிகள் தமது நிதித் தகைமையை உறுதிப்படுத்தி சத்தியக்கடதாசி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
தகைமைகளை மாற்றியமைத்து கடற்படையின் நிறைவேற்று அதிகாரியாக இணைந்து, பிரித்தானி கடற்படைக் அக்காடமியின் பயிற்சிப் பாடநெறிக்காக அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில், நேற்று (17) காலை கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிற்பகல் 1.45 மணியளவில் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான பிரதிப் பணிப்பாளர் நாயகம் ருவினி விக்ரமசிங்க, இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு 2016 ஜூன் 25ஆம் திகதி கிடைக்கப் பெற்றதற்கமையவே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பளிக்காது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி இங்கிலாந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சித் திட்டங்களில் சந்தேகநபர் பங்கேற்றுள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான யோஷித ராஜபக்ஷ, 2006ஆம் ஆண்டில் ஒரு சாதாரண சிவில் பிரஜையாக இருக்கும்போதே, பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியின் 'ரோயல் கடற்படை இளம் அதிகாரி் பயிற்சிப் பாடநெறியைப் பயில்வதற்கு தகுதியானவர் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளார்.





