ஜனாதிபதிக்கு இந்தியாவில் பிரமாண்ட வரவேற்பு
ஜனாதிபதியின் வருகை குறித்து இந்திய ஊடகங்கள் குறிப்பிடத்தக்க செய்திகளை வெளியிட்டன.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஊடாக ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 5.30 மணியளவில் இந்தியாவை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்பு இராஜாங்க அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மேலதிக செயலாளர் புனித் அகர்வால், நெறிமுறைத் தலைவர் அன்ஷுமன் கவுர் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் ஜனாதிபதியை அன்புடன் வரவேற்றனர்.
ஜனாதிபதியின் வருகை குறித்து இந்திய ஊடகங்கள் குறிப்பிடத்தக்க செய்திகளை வெளியிட்டன. ஜனாதிபதி திசாநாயக்க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரின் உருவங்கள் அடங்கிய விளம்பரப் பலகைகள் புது தில்லியின் முக்கிய ரவுண்டானாக்களைச் சுற்றி முக்கியமாகக் காட்சிப்படுத்தப்பட்டன.





