இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவிப்பு
இந்த ஆண்டு 32வீத வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பணப்பரிமாற்றம் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் வெளிநாட்டு பண அனுப்பல் அளவு கடந்த மாதத்திலும் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. அதன் பிரகாரம் கடந்த மே மாதம் 847 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளில் பணி புரிந்துவரும் இலங்கையா்களால் அனுப்பட்டுள்ளது. இது வரலாற்றில் ஒரு மாதத்தில் பதிவாகிய இரண்டாவதாக அதிக பண அனுப்பலாகும். இதற்கு முன்னர் ஒரு மாதகாலத்தில் அதிக பண அனுப்பலாக பதிவாகி இருப்பது 2025 டிசம்பர் மாதத்திலாகும். அது 879.1 அமெரிக்க டொலர்களாகும்.
2026 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் ஈட்டப்பட்ட வெளிநாட்டு பணப் பரிமாற்றத் தொகை 3.10 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதன்படி, இது கடந்த ஆண்டை விட 26வீத வளர்ச்சியாகும்.
2025 ஆம் ஆண்டின் மே மாதத்தில் 641.7 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணப் பரிமாற்ற வருமானம் ஈட்டப்பட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 32வீத வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அந்த அறிக்கையின்படி, இந்த ஆண்டு நாட்டிற்கு அதிக அளவிலான வெளிநாட்டு பண பரிமாற்றங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தே கிடைத்துள்ளன.





