பேருந்து கட்டணத்தை 2.5% குறைக்க தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி
ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் வருடாந்திர பேருந்துக் கட்டண திருத்தம் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.
2025 ஜூலை 01 ஆம் திகதி முதல் பஸ் கட்டணத்தை 2.5% குறைப்பதற்குத் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, போக்குவரத்து அமைச்சுக்கும் பல்வேறு பேருந்துச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் புதன்கிழமை (ஜூன் 25) நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணத்தை 2 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் பேருந்துச் சங்கங்களுக்கு அறிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் வருடாந்திர பேருந்துக் கட்டண திருத்தம் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்தில், கட்டண குறைப்பு குறித்து போக்குவரத்து அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால், பேருந்துச் சங்கங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, முதல் மற்றும் இரண்டாம் கட்ட கட்டணங்கள் மாறாமல் இருக்கும். கட்டணக் குறைப்பு அந்த ஆரம்ப கட்டங்களுக்கு அப்பால் தற்போதுள்ள கட்டண கட்டமைப்பிற்கு மட்டுமே பொருந்தும்.





