ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் கடனை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி
'தித்வா' புயலால் ஏற்பட்ட கடும் மழைவீழ்ச்சி காரணமாக உயிரிழப்புக்கள், இடம்பெயர்வுகள், வாழ்வாதார அழிவுகள் போன்ற அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பாரியளவ சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் கொள்கை அடிப்படைக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் 04-08-2026 அன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அமைச்சரவை பேச்சளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
குறித்த அறிவிப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிரந்தர பொது மூலதன வளங்கள் மூலம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கான கடன் உடன்படிக்கைக் கலந்துரையாடலை நடத்துவதற்கு 2026.06.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் வர்த்தக, முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் உப வேலைத்திட்டமொன்றுக்குரிய கடன் கலந்துரையாடல் வெற்றிகரமாகப் பூர்த்தியடைந்துள்ளது. இக்கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு சட்டமா அதிபர் அலவுலகம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள்கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்தோடு, ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியால் நிதியளிக்கப்படும் கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் கருத்திட்டத்தை மீண்டும் அதன் நோக்கத்தை மாற்றியமைத்தல்.
'தித்வா' புயலால் ஏற்பட்ட கடும் மழைவீழ்ச்சி காரணமாக உயிரிழப்புக்கள், இடம்பெயர்வுகள், வாழ்வாதார அழிவுகள் போன்ற அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பாரியளவ சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால், தேசிய மீள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்புக்கள் அதிக முன்னுரிகளாகத் தோன்றியுள்ளன. அதற்கமைய, தற்போதுள்ள தீர்மானம்மிக்க பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் புளரமைப்பு மற்றும் மீள்கட்டமைப்பு ஒத்துழைப்புக்களுக்கான நிதி வசதிகளை மீண்டும் அதன் நோக்கங்களை மாற்றியமைப்பதற்கும் மற்றும் மீள்கட்டமைப்பதற்கும் இலங்கை அரசின் அபிவிருத்திப் பங்காளர்களின் உடன்பாடு கிடைத்துள்ளது. அதன்கீழ், ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியால் நிதியளிக்கப்படும் கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் கருத்திட்டத்தை மீண்டும் அதன் நோக்கத்தை மாற்றியமைத்து, இக்கருத்திட்டத்தை 'அவசர வீடமைப்பு மறுசீரமைப்பு கூறு' எனும் புதிய கூறொன்றை உருவாக்கி, 'தித்வா' புயல் அனர்த்தத்தால் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சேதமடைந்துள்ள வீடுகளைப் புனரமைப்பதற்கு 10.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை ஒதுக்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.





