அத்துரலியே ரத்ன தேரருக்கு விளக்கமறியல்
2020 பொதுத் தேர்தலில் கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக 'அபே ஜன பல' கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக இந்த வழக்கு நடைபெறுகிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை, கங்கொடவில நீதிவான் நீதிமன்றம் 29-08-2025 அன்று உத்தரவிட்டது.
இது குறித்து கொழும்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2020 பொதுத் தேர்தலில் கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக 'அபே ஜன பல' கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக இந்த வழக்கு நடைபெறுகிறது.
இந்த சம்பவத்தில் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய ரத்ன தேரர் மன்றில் சரணடைந்தார். இதனையடுத்தே அவரை விலக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.