ஒட்டாவாவைச் சேர்ந்த இணையவழி மோசடிக்காரருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஆர்.சி.எம்.பி, எஃப்.பி.ஐ மற்றும் யூரோபோல் சம்பந்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து 33 வயதான மத்தேயு பில்பர்ட் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களைப் பாதிக்கும் இணையப் பிணைத்தொகைத் (ரான்சம்வேர்) தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒட்டாவா இளைஞருக்கு வெள்ளிக்கிழமை இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆர்.சி.எம்.பி, எஃப்.பி.ஐ மற்றும் யூரோபோல் சம்பந்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து 33 வயதான மத்தேயு பில்பர்ட் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கனடாவில் உள்ள தனியார் குடிமக்கள், வணிகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மீதான இணையப் பிணைத்தொகைத் தாக்குதல்களையும், அமெரிக்காவில் "இணையம் தொடர்பான குற்றங்களையும்" ஒருங்கிணைத்ததாக பில்பர்ட் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மோசடி, கணினியை அனுமதியின்றி பயன்படுத்தியது, கணினி அமைப்பை அனுமதியின்றி பயன்படுத்தியது அல்லது விஷமம் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. இறுதியில் மோசடி மற்றும் மோசடி தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.