Breaking News
அறுவை சிகிச்சையின் பின்னர் ரணில் குணமடைந்து வருகின்றார்
ணில் விக்கிரமசிங்க மேலும் சில நாட்களுக்கு அவர் வைத்தியர்களின் கண்காணிப்பில் வைத்தியசாலையில் தங்கியிருப்பாரென ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான அறுவைச் சிகிச்சையின் பின்னர் தற்போது குணமடைந்து வருகின்றார். மேலும் சில நாட்களுக்கு அவர் வைத்தியர்களின் கண்காணிப்பில் வைத்தியசாலையில் தங்கியிருப்பாரென ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன விடுத்துள்ள அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 24ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் மத வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.





