இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு
கடந்த ஜூனில் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை பிரதிநிதிகளுக்கு இடையே இதுபோன்ற ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்புக்கும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சபைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இருதரப்பு பொருளாதார கூட்டாண்மையை ஊக்குவிப்பதற்கும், குறிப்பாக நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையை ஆதரிப்பதற்காகவும், ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை அடையாளம் காண்பதற்கும் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு அமைப்புகளிடையே பேச்சுவார்த்தைகளை எளிதாக்கி வருகிறது.
அதற்கமைய கடந்த ஜூனில் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை பிரதிநிதிகளுக்கு இடையே இதுபோன்ற ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை ஆகியவை தகவல் பகிர்வு, முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான கூட்டாளர்களை இணைத்தல் உள்ளிட்ட ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராயும் நோக்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.





